Thursday 18th of April 2024 11:31:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
ட்ரம்பை பதவி நீக்கும் முயற்சியை  நிராகரித்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!

ட்ரம்பை பதவி நீக்கும் முயற்சியை நிராகரித்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி!


அமெரிக்க அரசியலமைப்பு 25-ஆவது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவி நீக்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு ஆதரவளிக்க முடியாது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் கடந்த 6 ஆம் திகதி ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வன்முறையை ட்ரம்பே தூண்டிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கும் முயற்சியில் பிரதிநிதிகள் சபை ஈடுபட்டுள்ளது.

25-ஆவது அரைசியலமைப்பு மூலம் ட்ரம்பை பதவி நீக்கம் செய்யவேண்டுமானால் அதற்கு துணை ஜனாதிபதியின் ஒப்புதல் அவசியமாகும். இதற்காக துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் உடன்பாட்டைப் பெற சபாநாயகருமான நான்ஸி பெலோசி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்பை பதவி நீக்க உடன்படப் போவதில்லை என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 25-வது சட்டத்திருத்தம் என்பது தண்டனை அளிப்பதோ அல்லது கைப்பற்றுதலோ அல்ல. ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தைப் பயன்படுத்தி அவரைப் பதவி நீக்கம் செய்வது மோசமான முன் உதாரணமாகிவிடும். அதுநாட்டின் நலனுக்கும் எமது அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்தன்மைக்கும் பாதகமானதாவே அமையும் என அக்கடிதத்தில் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் செயற்பட முடியாதவராக இருக்கும் நிலையில் திறமையற்றவராக இருக்கும்போதுதான் 25 –வது சட்டத்திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி அவரைப் பதவி நீக்க முடியும்.

அத்துடன் அதிகாரமாற்றம் முறையாக நடக்க வேண்டும் என்பதையே தான் விரும்புவதாகவும் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயால் அமெரிக்கா எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனவரி 6 கலவரம் ஆகியவற்றுக்கு மத்தியில் அமெரிக்க மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம்இது

இவ்வாறான சூழலில் நாம் நமக்குள் பிளவுபடாமல் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்.

அத்துடன் அமெரி்க்காவின் அடுத்த ஜனாதிபதி ஜோ பைடனை வரவேற்கத் தயாராக வேண்டும்.

அதிகாரமாற்றம் முறைப்படி நடப்பதற்கான உறுதிமொழியை நான் உங்களுக்கு வழங்குகிறேன் எனவும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோஸிக்கு மைக் பென்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக 25-வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்துவது சரியானதாக இருக்காது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE