Saturday 16th of January 2021 12:38:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
அனைத்து இலங்கையருக்கும்  கொரோனா தடுப்பூசி இலவசம்!

அனைத்து இலங்கையருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்!


அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு வரும். அனைத்து இலங்கையர்களுக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற ஒரு சொட்டுக்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும். ஒக்ஸ்போர்டு-அன்ட்ராஜெனெகா தடுப்பூசி ஒரு சொட்டுக்கு 3 அமெரிக்க டொலர்கள் செலவாகும். எனினும் எந்தத் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது? என்பது குறித்து இலங்கை இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் எக்கனாமி நெக்ஸ்டிடம் டாக்டர் சுதத் சமரவீர இன்று கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை பெரும்பாலும் ஒக்ஸ்போர்டு-அன்ட்ராஜெனெகா தடுப்பூசியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளதாக கோவிட் தடுப்பூசி செயலணித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான லலித் வீரதுங்க நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பின் தலைமையில் உருவாகும் உலகப் பொதுத் தடுப்பூசியான கோவாக்ஸ் தடுப்பூசியைப் பெறுவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையும் இலங்கை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் தொடர்பான மேலதிக செயலாளர் டாக்டர் லட்சுமி சோமதுங்க கூறியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE