Saturday 16th of January 2021 11:10:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் அரசு பயணத்தடை!

இலங்கை உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் அரசு பயணத்தடை!


கொரோனாத் தொற்று பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 11 ஆசிய நாடுகளில் இருந்து வருகைதரும் வெளிநாட்டவர்களுக்கு பயணத் தடை விதிக்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.

குறித்த 11 நாடுகளில் இருந்து ஜப்பானிற்குள் வருகைதரும் ஜப்பானியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு பொருந்தும் வகையில் இப் பயணத்டை அமுலாகும் என அந்த நாட்டு பிரதமர் யொஸிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை, சீனா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங், மியன்மார், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கே ஜப்பான் அரசினால் இவவாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்தே, ஜப்பான் போக்குவரத்துக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா போன்ற நகரங்களில் ஏற்கனவே அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்ததோடு, மேலும் பல நகரங்களுக்கும் அது விரிவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக ரீதியான பயணங்களை மேற்கொண்டு ஜப்பானுக்கு வருவோர், ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை ஜப்பானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 4 ஆயிரம் பேரளவில் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE