Friday 29th of March 2024 05:58:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனிமைப்படுத்தப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை; வைத்தியர் த.சத்தியமூர்த்தி!

தனிமைப்படுத்தப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை; வைத்தியர் த.சத்தியமூர்த்தி!


தனிமைப்படுத்தப்படுபவர்கள் பயப்படத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதட்டத்தை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 1284 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.மதன் தெரிவித்தார்.

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் தொற்றா நோய்கள் கொண்ட நபர்கள் பிரத்தியேகமாக கவனிக்கப்படுவதாக சிகிச்சை நிலைய மருத்துவர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி. தற்போதைய நிலையில் டெங்கு நோய் தொற்று நிலைமை யாழ் மாவட்டத்தில் கடந்த வருடங்களோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலே காணப்படுகின்றது.

எனினும் தற்போது மழை பெய்ததன் காரணமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமிடத்து டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து யாழ்மாவட்டத்தினை பாதுகாக்கலாம் எனவும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE