இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜோ ரூட்டின் அபாரா துடுப்பாட்டத்தின் மூலம் வலுவான நிலையை எட்டியுள்ள இங்கிலாந்து அணி முதல் முதல் இனிங்சில் முன்னிலை பெற்றுள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி காலி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 135 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தது.
இலங்கை அணியின் குசல் மென்டிஸ், டில்ருவான் பெரேரா மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகிய வீரர்கள் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்த நிலையில் எந்தவொரு வீரரம் 30 ஓட்டங்களைத் தாண்டாதா நிலையில் ஆட்டமிழந்தமை இலங்கை அணி மிகக் குறைவான ஓட்ட எண்ணிக்கையுடன் முதல் இனிங்சை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து முதல் இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்து அதிர்ச்சி கொடுத்திருந்தார் லசித் எம்புல்தெனிய.
17 ஓட்டங்களுக்கு முன்னணி இரு வீரர்களை இழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.
முதல் நாள் ஆட்ட நிறைவில் 41 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 127 ஒட்டங்களைப் பெற்றிருந்தது இங்கிலாந்து.
மழை காரணமாக தாமதமாக போட்டி ஆரம்பித்திருந்த நிலையில் தொடர்ந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணித்தலைவர் ஜோ ரூட் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சதம் அடித்ததுடன் 168 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.
லோரன்ஸ் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பட்லரும் 7 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணி 94 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மீண்டும் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 2ம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
நாளை போட்டியின் 3ம் நாள் ஆட்டம் தொடர உள்ள நிலையில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை விட 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை