Saturday 27th of February 2021 12:02:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
காலி டெஸ்டில் ஜோ ரூட் இரட்டைச் சதம்: 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை!

காலி டெஸ்டில் ஜோ ரூட் இரட்டைச் சதம்: 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை!


காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் அபாரமாக துடுப்பெடுத்தாடி இரட்டைச் சதமடித்துள்ள நிலையில் இரண்டாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தடிவரும் இலங்கை அணி 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

சுற்றுலா இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்சுக்காக இலங்கை அணி பெற்ற 135 ஓட்டங்களுக்கு பதிலளித்து விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 421 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தது.

காலி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் மூன்றாவது நாளாகிய நேற்றைய ஆட்டத்தை தொடர்ந்த ஜோ ரூட் 228 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இலங்கை அணிக்கு எதிராக ஜோ ரூட் அடித்த முதலாவது இரட்டைச் சதமாகவும் அவரது 4வது இரட்டைச் சதமாதகவும் அமைந்திருந்ததுடன், இங்கிலாந்து வீரர்களில் மிகக் குறைந்த போட்டிகளில் (98 போட்கள்) 8 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி இறுதியில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 421 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 286 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இனிங்சை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் லகிரு திரிமன்னே இணை சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது.

முதலாவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களைப் பெற்ற போது 62 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் குசல் பெரேரா ஆட்டமிழந்து வெளியேறினார்.

கடந்த போட்டிகளில் மிக மோசமான வகையில் துடுப்பெடுத்தாடிவரும் குசல் மென்டிஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது நாள் ஆட்ட நிறைவில் 61 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றுள்ளது இலங்கை அணி.

லகிரு திரிமன்னே 76 ஓட்டங்களுடனும், லசித் எம்புல்தெனிய ஓட்டமெதனையும் பெறாது உள்ள நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடரவுள்ளது.

இங்கிலாந்து அணி முதலாவது இனிங்சுக்காக பெற்ற ஓட்டங்களின் அடிப்படையில் 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க 130 ஓட்டங்ககள் பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE