இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் முதல் மூன்று நாட்களில் மாத்திரம் 100 கோடி இந்திய ரூபா வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாத் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 50 வீதமான இருக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டு அனுமதிகப்பட்டுள்ள நிலையில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
தொடர்ச்சியாக பல நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்ததாக, தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தெரிவித்தது.
இந்நிலையில் முதல் 3 நாளில் மாஸ்டர் திரைப்படம் 100 கோடி இந்திய ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.