74 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 38 ஓட்டங்களுகளைப் பெறுவதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிவருகிறது.
இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க 130 ஓட்டங்களை பெற்றாக வேண்டிய நெருக்கடியில் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியின் லகிரு திருமன்னே - ஏஞ்சலோ மத்தியூஸ் இணை பொறுப்புடன் விளையாடி அக்கட்டத்தை கடந்து வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தனர்.
சிறப்பாக விளையாடிய லகிரு திரிமன்னே சதமடித்து 111 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். ஏஞ்சலோ மத்தியூஸ் 71 ஓட்டங்களையும், நிரோசன் டிக்வெல 29 ஓட்டங்களையும், டில்ருவான் பெரேரா 24 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 20 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்த நிலையில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 359 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீசசில் ஜாக் லீச் 5 விக்கெட்டுக்களையும், டொம் பெஸ் 3 விக்கெட்டுக்களையும், சாம் கர்ரன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.இதையடுத்து 74 என்ற சுலப வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இனிங்சைப் போலவே லசித் எம்புல்தெனிய அதிர்ச்சியளித்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரொம் சிப்லேயை 2 ஓட்டங்களுடனும், கிரேவ்லியை 8 ஓட்டங்களுடனும் எம்புல்தெனிய பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற்றியிருந்தனர்.
முதலாவது இனிங்சில் இரட்டைச் சதம் அடித்து அபாரா ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஜோ ரூட் ஒரு ஓட்டத்தை பெற்றிருந்த போது நிரோசன் டிக்வெலவினால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டிருந்தார்.
நேற்றைய ஆட்ட நேர நிறைவில் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி.
இன்று 5வது நாள் ஆட்டம் தொடரும் நிலையில் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்பதால் இங்கிலாந்து அணி பெரும்பாலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இருப்பினும் போட்டியின் தொடக்கத்தில் மீண்டும் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை கொடுத்தால் போட்டி விறுப்பாக அமையும் எனபதனையும் மறுப்பதற்கில்லை.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை