Thursday 25th of April 2024 11:53:00 AM GMT

LANGUAGE - TAMIL
-
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில்  ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் பரபரப்பு!

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஆங்காங்கே ஒன்றுகூடும் எதிர்ப்பாளர்களால் பரபரப்பு!


அமெரிக்க ஜனாதிபதியாக நாளை மறுத்தினம் புதன்கிழமை ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில் மாகாண அரசு தலைமையகங்கள் முன்பாக ஆயுதம் ஏந்திய சிலர் உட்பட சிறிய அளவிலான எதிர்ப்பாளர்கள் கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க காங்கிரஸ் தலைமையகத்துக்குள் புகுந்து அண்மையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் பின்னணியில் அங்கு பதட்ட நிலை நீடிக்கிறது.

இவ்வாறான பதட்டங்களுக்கு மத்தியில் சிறிய அளவான எதிர்ப்பாளர்கள் அரச தலைமையகங்கள் முன் கூடிய நிலையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெக்சாஸ், ஓரிகான், மிச்சிகன், ஓஹியோ மற்றும் சில இடங்களில் உள்ள மாகாண அரச தலைமையக கட்டடங்களுக்கு வெளியே சிறிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எனினும் அனைத்து அரச தலைமையங்களைச் சூழவும் பொலிஸார், ஆயுதப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. முன்னரே எச்சரித்துள்ளது.

இதனையடுத்து ஜோ பைடன் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள தலைநகர் வொஷிங்டன் உட்பட நாடு முழுவதும் முக்கிய இடங்களில் வன்முறைகளைத் தடுக்கத் தயார் நிலையில் ஆயிரக்கணக்கில் தேசிய காவற்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

எனினும் ட்ரம்ப் ஆதரவுக் குழுக்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக நேற்று ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. சில குழுக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என தங்களது ஆரவாளர்களை கேட்டுள்ளன.

இந்நிலையில் சிறிய தொகையினர் அடங்கிய எதிர்ப்புக் குழுக்கள் சில நகரங்களில் நேற்று ஒன்றுகூடின.

ஓஹியோவின் கொலம்பஸில் உள்ள அரசு தலைமை அலுவலகம் முன் ட்ரம்ப் ஆதரவாளர்கள் சுமார் 25 பேர் நேற்று கூடியிருந்ததாக நியூயோர்க் ரைம்ம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், மிச்சிகன் - லான்சிங்கில் உள்ள அரசு தலைமை அலுவலக கட்டத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய எதிர்ப்பாளர்கள் சிலர் உட்பட 30-க்கும் குறைவானவர்கள் நேற்று கூடி வந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று டெக்ஸால் அரசு தலைமைச் அலுவலகத்துக்கு முன்பாகவும் 10 பேர் வரையான எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர்.

புதன்கிழமை ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில் மேலும் அதிக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இதனால் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள வொஷிங்டன் டி.சி.யில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவொரு எதிர்ப்பாளர்களும் வன்முறைகளில் ஈடுபடமுடியாதவாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவு தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக பதவியேற்பு விழாவின்போது ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் அரங்கம் புலானாய்வாளர்களின் கோரிக்கைக்கு அமைய மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோவிட் -19 தொற்றுநோயை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு பாவியேற்பு விழாவுக்காக தலைநகரில் ஒன்றுகூட வேண்டாம் என பைடன் குழுவினர் ஏற்கனவே அமெரிக்கர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE