Tuesday 16th of April 2024 03:57:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
நினைவேந்தல் தூபியை மீளமைக்க அனைவரின் பங்களிப்பில் நிதி உதவி கோரல்!

நினைவேந்தல் தூபியை மீளமைக்க அனைவரின் பங்களிப்பில் நிதி உதவி கோரல்!


யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களியுடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எம்.பாலேந்திரா இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அவர் மேலும் தெராவிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 08.1.2021 அன்று இரவு இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபியானது பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூலமாகவும், மாணவர்களின் போராட்டம் மூலமாகவும், உலகத் தமிழர்கள் மற்றும் ஏனைய மக்களின் ஆதரவுடன் மீள அமைப்பதற்கு அனுமதி கிடைக்கப்பெற்று கட்டுமாண பணிகள் ஆரம்பிப்பதற்கு காரனமாக அமைந்த அனைவருக்கும் முதற்கண் நனௌறியினை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

குறித்த தூபியின் மீள நிர்மாணிப்பானது சமூகமயப்படுத்தப் பட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஆதரவு வழங்கும் அனைவருடைய நிதி பங்களிப்புடன் அமைக்க எண்ணியுள்ளோம்.

இதற்கான நிதியானது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின், 162100100000661 எனும் மக்கள் வங்கியின் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் கட்டுமான பணிகள் இடம்பெறும் என்பதை அறியத்தருவதுடன் குறித்த தூபி அமைப்பதற்கு அனைவருடைய ஆதரவையும் வேண்டு நிற்கின்றோம்.

மேலும் 13.1.2021 திகதியிடப்பட்ட மாணவர் ஒன்றியத்தின் நிதி சேகரிப்பு அறிக்கையானது முதற்கட்ட அறிவுறுத்தல் அறிக்கையாகும் என்பதனை மாணவர் ஒன்றியம் அறியத்தருகின்றது.

அது மாத்திரம் இல்லாமல் இதுவரை காலமும் 19.01.2021 வரை மாணவர் ஒன்றியத்தினால் நிதி சேகரிப்பு இடம்பெறவில்லை என நாம் அறியத்தருகின்றோம். எந்தவொரு நிதியம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் கணக்குக்கே கொண்டுவரப்பட்டு தூபி அமைக்கப்படும். ஏனைய எந்தவொரு நிதி கையாழ்கைக்கும் மாணவர் ஒன்றியம் பொறுப்புக்கூற முடியாது என்பதை அறியத்தருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE