Thursday 25th of April 2024 10:40:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
அமெரிக்க ஜனாதிபதியாக இன்று  பதவியேற்கிறார் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்!


அமெரிக்காவின் 46-ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸூம் பதவியேற்கிறார்.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு தொடக்க உரைகள் ஆரம்பமாகும். (11:30 EST -16:30 GMT) அதன்பின் மதியம் சுமார் 12 மணியளவில் ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொள்வர்.

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறைகளை அடுத்து பதவியேற்பு விழாவுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜோ பைடனுடன் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் பதவியேற்கிறார்.

தலைநகர் வொஷிங்டனின் உள்ள நாடாளுமன்ற வெளிவளாகத்தில் பதவியேற்பு விழா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கொரோனா தொற்று நோய் நெருக்கடி காரணமாக இம்முறை சுமார் 200 பேர் மட்டுமே பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பதவியேற்பு நிகழ்வில் பைடனின் மனைவி ஜில் பைடன், கமலா ஹரிசின் கணவர் ஆகியோரின் உரைகள் இடம் பெறுகின்றன. அதைத் தொடர்ந்து, வரவேற்பு உரை, உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து 46-ஆவது ஜனாதிபதியாக பைடன் பதவியேற்பார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரொபேர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் கமலா ஹரிசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

தொடர்ந்து ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த படை வீரர்கள் நினைவிடமான அர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். மாலை 3 மணி அளவில், பைடன், ஜில் பைடன் ஆகியோர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பதவியேற்று விழாவில் முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜோர்ஜ் டபிள்யு புஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE