Saturday 20th of April 2024 04:20:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
சென்னை - மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால்  நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை!

சென்னை - மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை!


இலங்கைத்தீவில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான வெளி தமிழ்மக்களுக்கு இல்லாத நிலையில், சென்னை மெரினா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் ஒன்றினை தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் இடம்பெற்றிருந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கோரிக்கையினை அவர் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல்வெளி இல்லாத நிலையில்தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது நினைவுகூர்வதற்கான வெளியும் தமிழ்மக்களுக்கு அங்கில்லாத நிலையில், அதற்கான வெளியினை இலங்கைத்தீவுக்கு வெளியே உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உலகின் தலைநகரங்களில் முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னங்களை உருவாக்கும் வகையில், அதற்கு முன்மாதிரியாக தமிழகத்தின் சென்னை மெரீனா கடற்கரையிலோ அல்லது சென்னையின் வேறு பகுதியிலோ முள்ளிவாய்க்கால் அடையாளச்சின்னத்தை தமிழ்நாட்டு அரசு உருவாக்க வேண்டும் என கோருகின்றோம். இதற்கு தமிழ்நாட்டின் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்க வேண்டுகிறோம்.

இதுமட்டுமல்லாது மே-18 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாளினை உலகெங்கும் வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தும் விதமாக 'உலகத்தமிழர் தேசிய துக்க நாளாக' மே-18ஐ தமிழ்நாட்டு அரசு பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE