Friday 5th of March 2021 01:26:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஓட்டமாவடியில் இம்மாதம் டெங்கு நோயால் 84 பேர் பாதிப்பு!

ஓட்டமாவடியில் இம்மாதம் டெங்கு நோயால் 84 பேர் பாதிப்பு!


ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு (84) பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் வகையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மீராவோடை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல் வேலைத்திட்டம் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் நடைபெற்றதில் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், டெங்கு கட்டுப்படுத்தல் வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீடு வீடாக சென்று டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இருபதாம் திகதி வரை எண்பத்திநான்கு (84) பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்தேழு (27) நபர்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எண்பத்தியொரு (81) நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE