Wednesday 24th of April 2024 11:14:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
முல்லை ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அடிப்படை வசதிகள் சீர்கேடு: மக்கள் பெரும் அவதி!

முல்லை ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அடிப்படை வசதிகள் சீர்கேடு: மக்கள் பெரும் அவதி!


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படாமை தொடர்பில் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

மழை காலங்களில் பெரும் சிரமங்களைளும், ஆபத்துக்களையும் எதிர்கொள்ளும் வசந்தநகர் மக்கள் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வசந்தநகர் மக்களே இவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

நீரோடை போன்று காட்சியளிக்கும் குறித்த வீதியை பயன்படுத்தியே மக்கள் அன்றாட போக்குவரத்துக்களை முன்னெடுத்து வருவவதாக தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்க சொந்தமான குறித்த வீதியை புனரமைத்து தருமாறு பிரதேச செபை தவிசாளர் உள்ளிட்டோருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கும் பல்வேறு தடவை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தமக்கு தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நியூட்டன் வீதி என அழைக்கப்படும் குறித்த வீதியை வசந்தநகர், இந்துபுரம், சாந்தபுரம் உ்ளிட்ட பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருவதுடன், ஏ9 வீதியையும் கிராமத்தையும் இணைக்கும் பிரதான வீதுியாகவும் காணப்படுகின்றது. குறித்த வீதியில்காணப்படும் பாலம் ஆபத்தான பாலமாக காணப்படுவதாகவும், அதன் ஊடாக பயணிப்பதில் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், பாடசாலை மாணவர்கள் பலரும் அவலங்களை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிடுவதுடன், குறித்த வீதியை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

தமது பிரதேசத்திற்கு பெருந்தெருக்கள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட வீதி மக்கள் பயன்பாடு குறைந்த பகுதியில் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், சில அரசியல் நோக்கங்களிற்காக அவ்வாறு பிரதேச செயலகத்தினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்களள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த வீதியின் முக்கியத்துவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் இன்றுவரை அதற்கான தீ்வு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE