Friday 19th of April 2024 01:55:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில்  தமிழர்களின் பாதுகாப்பை பிரான்ஸ் உறுதி செய்ய வேண்டும்; 21 பிரெஞ்சு எம்.பிக்கள் மக்ரோனுக்கு கடிதம்!

இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை பிரான்ஸ் உறுதி செய்ய வேண்டும்; 21 பிரெஞ்சு எம்.பிக்கள் மக்ரோனுக்கு கடிதம்!


ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடான பிரான்ஸ், அதன் அனைத்துச் செல்வாக்குகளையும் பயன்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவ வேண்டும் என பிரான்ஸ் எம்.பிக்கள் 21 பேர் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் சமூகம் இலங்கையில் தற்போது எதிர்கொண்டுவரும் ஆபத்தான சூழல் குறித்து பிரான்ஸ் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் சமூகத்தினர் எங்களது கவனத்தை ஈர்த்துள்ளனர் என பிரான்ஸ் ஜனாதிபதிக்கு 21 எம்.பிக்களும் கையெழுத்திட்டு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் நயவஞ்சக போக்கு போருக்குப் பின்னரும் தொடர்கிறது. போருக்குப் பின்னர் சா்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் பரிந்துரைத்த இடைக்கால நீதிப் பொறிமுறையை அமுல்படுத்தவும் இலங்கை அரசு தவிறிவிட்டது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த நீதி விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு போன்றவை குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளவில்லை .

இலங்கையில் தமிழர்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. வெறுப்புச் பேச்சுக்கள் மீண்டும் தலையெடுத்துள்ளன. அங்கு தமிழர்களுக்கு எதிரான அரசியல் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றனர். பயங்கரவாத சட்டத்தின் கீழ் சித்திரவதை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் தொடர்கின்றன.

மறுபுறத்தே தமிழர் படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னால் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது.

அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்திற்கு சொந்தமாக காணிகள் மீண்டும் வழங்கப்படவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கு 21 பிரான்ஸ் எம்.பிக்களும் கையெடுத்திட்டு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபாட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடான பிரான்ஸ், அதன் அனைத்துச் செல்வாக்குகளையும் பயன்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவ வேண்டும் என பிரான்ஸ் எம்.பிக்கள் 21 பேர் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE