இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது இனிங்ஸில் ஏஞ்சலோ மத்தியூஸின் சதத்தின் மூலம் இலங்கை அணி 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கு எதிரான காலி மைதானத்தில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்சியாக இருந்தது.
இலங்கை அணி 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் பெரேரா 6 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இதையடுத்து முதாலாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஒசாதா பெர்னாண்டோவையும் ஓட்டமெதனையும் பெறாத நிலையில் இங்கிலாந்தின் அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.
07 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் திரிமன்னேவுடன் ஜோடி சேர்ந்த மத்தியூஸ் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடினார்.
இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 76 ஆக உயர்ந்த நிலையில் லகிரு திரிமன்னே 43 ஓட்டங்களைப் பெற்று ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த அணித் தலைவர் தினேஸ் சந்திமல் மற்றும் மத்தியூஸ் ஜோடியும் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை அணி 193 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நான்காவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையில் தினேஸ் சந்திமல் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்நதாலும் நிதானமாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஏஞ்சலோ மத்தியூஸ் தனது 11வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்துள்ளதுடன் 107 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது உள்ளார்.
நிரோசன் டிக்வெலவும் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ள நிலையில் இன்றை முதலாவது நாள் ஆட்ட நேர நிறைவில் 87 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுள்ளது இலங்கை அணி.
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலைப்படுத்தும் நெருக்கடி காணப்படும் நிலையில் முதலாவது நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஆறு விக்கெட்டுக்களள் கைவசம் உள்ள நிலையில் நாளைய 2ம் நாள் ஆட்டத்தில் ஓட்டங்களை குவித்து சவாலான இலக்கை எட்டலாம் எனஎதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை