Thursday 25th of April 2024 10:50:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
உன்னிச்சையில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை - சந்திரகாந்தன் தெரிவிப்பு!

உன்னிச்சையில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை - சந்திரகாந்தன் தெரிவிப்பு!


எங்களுக்கு பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கம் பெரிதாக செய்ததாக பத்திரிகைகளில் வாசித்தோம். ஆனால் எதனையும் காணமுடியவில்லை. நாங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட வேலைத்திட்டங்களே கண்ணில் தெரிகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

1000 கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் முதலாவது திட்டம் இன்று மட்டக்களப்பு, வவுணதீவில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ,பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின்பேரில் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த ஆகியோரினால் இந்த 1000கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்கீழ் சுமார் 18மில்லியன் ரூபா செலவில் தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் மற்றும் சமூக பங்களிப்புடன் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இந்த குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் பூ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், விசேட அதிதியாக வவுணதீவு பிரதேச செயலாளர் சுதாகர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ரி.தினேஸ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது குடிநீர் திட்டம் திறந்துவைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது.இந்த குடிநீர் விநியோகத்திட்டம் மூலமாக இப்பகுதியில் உள்ள 300 குடும்பங்கள் நன்மையடையும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.இப்பகுதியில் கடந்த காலத்தில் குடிநீர் விநியோகங்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சந்திரகாந்தன்,

நான் நீண்டகாலமாக பசுமையான இடங்களை பார்க்கவேண்டும் என்று அவாவில் இருந்தேன்.அதிலும் நான் நடமாடிய காஞ்சிரங்குடாவில் நிகழ்வில் கலந்துகொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி.91ஆம் ஆண்டு காலப்பகுதியில் நான் இப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றேன்.இப்பகுதியில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.காவி நிறத்தில் தண்ணீர் காணப்படும். அதனைக்குடிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்.எனக்கும் அந்த தண்ணீரை குடித்து பற்கள் மஞ்சள் நிறமாக மாறியிருந்தது.இவ்வாறான நிலையில் இந்த சூழ்நிலையெல்லாம் மாற்றியமைக்ககூடிய சூழலை கடவுள் உருவாக்கிக்கொடுத்திருக்கின்றார்.

தரமான கல்வியும் சுத்தமான குடிநீரும் அனைவரும் கிடைக்கவேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும்.2000ஆம் ஆண்டு மிலேனியம் திட்டம் அதன் ஊடாக உருவானது.இந்த திட்டம் இன்னும் மட்டக்களப்பினை வந்துசேரவில்லையென்பதே கவலைக்குரியதாகும்.

எங்களது திட்டமிடலிலும் பிரச்சினையிருக்கின்றது. உன்னிச்சைகுளத்தினை மையப்படுத்தி பெரியளவிலான குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பிக்கப்படும்போது வவுணதீவில் குடிநீர் மையம் ஆரம்பிக்கப்பட்டபோது அது தொடர்பில் யாரும் கவனத்தில்கொள்ளவில்லை .நாங்களும் கூட அது தொடர்பில் எண்ணியது கிடையாது. வவுணதீவில் இருந்து மட்டக்களப்பு நகர் உட்பட கரையோர பகுதிக்கு நீர்வழங்கல் திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது அது தொடர்பில் யாரும் சிந்தித்தது கிடையாது.வவுணதீவு பிரதேச மக்களை வைத்து குறித்த திட்டத்தினை மேற்கொள்வது குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

தற்போது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். உன்னிச்சை தண்ணீரை வவுணதீவுக்கு கொண்டுவந்து சுத்திகரித்து மீண்டும் உன்னிச்சைக்கு அனுப்பமுடியாது.இப்பகுதிக்கு தண்ணீர்வழங்கவேண்டுமானால் உன்னிச்சையில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்.அதற்கு தேவையான நிதியைப்பெற்றுக்கொள்வது நடவடிக்கையெடுத்துவருகின்றேன்.

அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குவது ஜனாதிபதியின் திட்டம்.ஜனாதிபதியின் இந்த திட்டத்தின் அதிகளவான திட்டங்களை இந்த மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

நான் முதலமைச்சராகயிருந்தபோது உலக வங்கியுடன் இணைந்து பல குடிநீர் திட்டங்களை ஆரம்பித்திருந்தேன்.சிறுநீரக பிரச்சினையுடையவர்கள் உள்ள,அதிகளவு மக்கள் வாழுகின்ற கிராமங்களுக்கு எவ்வாறு சமூக குடிநீர் விநியோக திட்டங்களை வழங்குவது என்பதை திட்டமிடவுள்ளோம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. நாங்களும் சுய உற்பத்தியை அதிகரித்து வாழ்ந்துகொண்டு முடியுமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு நாங்களும் முயற்சியை எடுக்கின்றோம்.

எங்களுக்கு பின்னர் வந்த நல்லாட்சி அரசாங்கம் பெரிதாக செய்ததாக பத்திரிகைகளில் வாசித்தோம். ஆனால் எதனையும் காணமுடியவில்லை.வவுணதீவு சந்தியில் இருந்து மண்முனை வரையில் போட்ட காபட் வீதி உட்பட நாங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட வேலைத்திட்டங்களே கண்ணில் தெரிகின்றது.மீண்டும் அந்த சந்தர்ப்பத்தினை எங்களுக்கு கடவுள் வழங்கியிருக்கின்றார்.முடிந்தவரையில் பணியாற்றுN


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE