Tuesday 16th of April 2024 02:39:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தில் கொரோனா பலி  ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இங்கிலாந்தில் கொரோனா பலி ஒரு இலட்சத்தைக் கடந்தது!


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இங்கிலாந்தில் புதிய திரிவு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த நாடு தீவிரமாகப் போராடி வருகிறது. அத்துடன், தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கொரோனா மரணம் ஒரு இலட்சம் என்ற கடுமையாக மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி திட்டம் பரவலாக நடைமுறைக்கு வரத் தொடங்குவதற்கு முன்பு மேலும் பல ஆயிரம் மரணங்கள் நிகழும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறினார்.

கொரோனாவால் அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் இங்கிலாந்து தற்போது 5 -ஆவது இடத்தில் உள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை 1,631 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் மொத்த மரணங்கள் ஒரு இலட்சத்து 162 ஆகப் பதிவாகின.

அதேவேளை, நேற்று மேலும் 20,089 புதிய தொற்று நோயாளர் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, இரண்டாம் உலகப் போரில் இறந்த பிரித்தானியர்களை விட கொரோனாவால் இறந்தவர்களின் தொகை அதிகமாகும்.

1940-1941 -ஆம் ஆண்டுகளில் 57 நாட்கள் தொடர்ந் பிளிட்ஸ் குண்டுத் தாக்குதலிகளில் 43,000 பேர் இறந்த நிலையில் கொரோனா மரணங்கள் அதனை விட இரு மடங்குக்கும் அதிகமாகும் .

ஒரு இலட்சம் மரணங்கள் என்ற மோசமாக புள்ளிவிபரத்தின் பின்னணியில் இருக்கும் துயரங்களைக். கணிப்பிடுவது கடினமாகும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மரணச் சடங்குகளைக் கூட மேற்கொள்ள முடியாத துயரம், இறுதி விடை கொடுக்க முடியாத அவலங்கள் இந்த இறப்புக்களின் பின்னணியில் உள்ளன எனவும் அவா் குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE