Monday 17th of May 2021 01:50:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் இராஜதந்திர நகர்வை அமெரிக்கவின் அழுத்தம் முறியடிக்குமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

இலங்கையின் இராஜதந்திர நகர்வை அமெரிக்கவின் அழுத்தம் முறியடிக்குமா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கை அரசியல் களம் தினம் தினம் நெருக்கடிகளை எதிர்கொள்வதும் அதனை முறியடித்துச் செயல்படுவதையும் இயல்பான ஒரு பொறிமுறையாகக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் கொரனோவுக்கு எதிரான தடுப்பூசியை பெறுவதில் ஏற்பட்டு;ள்ள அரசியல் குழப்பம் மட்டுமன்றி ஜெனீவாவை கையாளுவது பொறுத்தும் அமெரிக்க தூதுவரது வெளிப்பாடும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இத்தகைய நெருக்கடி ஒவ்வொன்றும் அதிக முரண்பாட்டை உள்நாட்டிலும் பிராந்திய சர்வதேச அரசியலிலும் ஏற்படுத்திவருகிறது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் கடந்த தசாப்தங்கள் முழுவதும் அத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு வெற்றிகரமானதாக மாற்றுவதில் பலமான இராஜதந்திரத்ததை வெளிப்படுத்தியிருந்தது. சமகாலத்திலும் எழுந்துள்ள அத்தகைய உத்திகளை இலங்கை ஆட்சியாளர்கள் கையாளுவதில் கரிசனை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்..இக்கட்டுரையும் சர்வதேசத்தின் உத்திகளையும் இலங்கையின் முறியடிப்பு உபாயங்களையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.டெபிலிட்ஸ் அண்மையில் (26.01.2021) தெரிவித்த கருத்தினை நோக்குவது பொருத்தமானதாகும். இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு அர்த்தமுள்ள திட்டத்துடன் வருமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்கா உதவி செய்வதென்பது மிரட்டி அச்சுறுத்துவதல்ல. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா அங்கம் பெறாதுவிடினும் இலங்கை அளித்த உறுதிமொழியில் வோசிங்டன் ஆர்வம் கொண்டிருகிறது. கடந்த ஆண்டு இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ்குணவர்தனாவிடமிருந்து உள்நாட்டுச் செய்முறை மூலம் விரிவான நல்லிணக்க உபாயம் இருக்கும் எனக் கேட்டபோது மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கும் போது அதில் முன்னேற்றம் கான விரும்புகிறேன். ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை முன்னெடுத்துச் செல்லவும் இடம்பெறவிருக்கும் மனித உரிமைப் பேரவையில் ஒர் அர்த்தமுள்ள திட்டத்தை கொண்டுவரவும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறது. எல்லோரும் எதிர்பார்த்த அர்த்தமுள்ள முன்னேற்றத்தை காணவில்லை என்பதில் ஒருவிதமான கவலை உள்ளது என்றார்.

மேலும்; மனித உரிமை தொடர்பாக இலங்கை அரசாங்த்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பில் அலைனா குறிப்பிடும் போது ஆணைக்குழு மிகவும் திறந்த தன்மையுடனும் சுய பிரதிபலிப்புடனும் இருக:குமென நம்புவதாக தெரிவித்தார்.

எனவே அலைனாவின் அறிக்கையை வைத்துப் பார்க்கும் போது அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக தொயவில்லை. மாறாக இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளைப் பார்க்கும் போது கவலையடைவதாகவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால் ஓரிடத்தில் மட்டும் அர்த்தமுள்ள திட்டத்துடன் ஜெனீவா வாருங்கள் என்ற தொனியில் தெரிவித்துள்ளார் இது சில செய்திகளை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளது. புதிய தீர்மானத்திற்கான வாய்ப்புப் பற்றிய செய்தியுடன் அமுலாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அந்த செய்தி காணப்படுகிறது.

இதற்கு பதிலளித்த இலங்கை அரசாங்கம் தெரிவித்த கருத்துக்கள் இராஜதந்திர ரீதியாவை. அதிக கோபத்தைக் கொண்டவை. அதனை அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல ஊடாக அறிய முடிகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகம் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையுடன் இலங்கை அரசாங்கம் முழுமையாக இணங்கப் போவதில்லை எனவும் இலங்கையின் இறைமைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க இலங்கை தயாராக இல்லை யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டுச் செயல்பாடுகள் மீது நாங்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளோம். என்று குறிப்பிட்டதோடு எதிர்கட்சியின் 30ஃ1 தீர்மானம் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும் அதனால் அதிலிருந்து விலகுவதாகவும் யுத்தக் குறிறங்கள் தொடர்பாக புதிதாக ஆராய்ந்து புதிய செயல்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது ஊடக அறிக்கையில் முழுமையாக இணங்கப் போவதில்லை என்ற அம்சமும் யுத்தத்தின் போது மனித உரிமை மீறப்பட்டிருக்கும் என்பதுவும் இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் எதனையும் அரசாங்கம் ஏற்கப்போவதில்லை என்பதுவும் அரசாங்கத்தழின் உள்நாட்டுப் பொறிமுறை மற்றும் சரியான தீர்மானம் எடுக்கப்போவதாக எதிர்பார்த்துள்ளோம் ஆகியன அதிக இராஜதந்திர மிக்க சொற்களாவே காணப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அரசாங்கத்தினையும் இலங்கை அரசாங்கத்தையும் ஜெனீவாவையும் பாதிக்காத வகையில் சொற்கள் தேர்ந்தெடு;ககப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இறைமை விடயத்தில் இலங்கை மக்களையும் உலக நாடுகளையும் கையாளுவதில் கரிசனை கொள்ளப்பட்டுள்ளது. இறைமை பற்றி உரையாடுவது அரசாங்கத்தினை மக்களை ஈர்த்துக் கொள்ளும் உத்தியாகவே தெரிகிறது.

இரண்டாவது விடயம் கொரனோவுக்கான தடுப்பூசி இறக்குமதி பற்றிய இந்தியா சீனா சார்ந்த போட்டித் தன்மையும் அதன் அரசியலும் சமகாலத்தில் முக்கியமானதாக விளங்குகிறது. அதிலும் குறிப்பாக கிழக்கு முனையத்தனை இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கியதற்கு பதிலாகவே இந்தியா தடுப்பூசியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக பௌத்த தேரரான பத்திரமுல்லே சீலரத்தின ஊடகங்கள் முன் தோன்றி குற்றம்சாட்டுக்களை முன்வைத்தார். இதனை அடுத்து தடுப்பூசி விவகாரம் அதிக அரசியலாக மாறியது. ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி சீனாவிடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரியிருந்தமையும் இந்தியா இலவசமாக முன்வந்தமையும் குழப்பகரமான விடயமாக அமைந்தது. தற்போது சீன தடுப்பு மருந்துகளை அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இதில் இலங்கை அரசாங்கம் சீனாவை முன்னிறுத்தியே இந்திஜயாவையும் மேற்குலகத்தையும் கையாண்டுவருகிறது என்பது தெளிவாக தெரியும் ஒரு விடயமாகும். மனித உரிமை முதல் தடுப்பு மருந்து வரை அனைத்தையும் சீனா சார்பான அரசியல் ஒன்றினைக் காணமுடிகிறது. அந்த வகையில் அண்மையில் தமிழக மீனவர் நால்வர் இலங்கை கடற்பரப்பில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை சற்று கடினமாகவே அமைந்திருந்தது. அவ்வாறே முள்ளிவாய்க்கால் துர்பி உடைப்பு விடயமும் அமைந்திருந்தது. அத்தோடு கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு துறைமுகத்திலும் கணிசமான பங்கினை இந்தியா பெறுவதில் இந்திய வெளியுறவு அமைச்சரது விஜயம் சார்த்தியமான முடிவுகளுக்கு இலங்கை விரைந்து nhசல்ல நிர்ப்பந்திக்கப்பட்டது. எனவே மேற்கூறிய அனைத்திலும் இந்தியாவின் கை ஓங்கியே இருந்தது. அல்லது அத்தகைய விடயங்களை அடைவதில் கணிசமான நகர்வை இந்தியா சாத்தியப்படுத்தியிருந்தது. அத்தகைய நீட்சியை தடுப்பதற்கு தடுப்பூசியை ஒரு பொறிமுறையாக இலங்கை அரசாங்கம் கையாண்டுள்ளது. அதுவே சீனாவின் பிரசன்னத்தை உடனடியாக அறிவிக்சக வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டது. இதுவரை காலமம் மௌனமாக இருந்த சீனா இந்தியா இலவசமாக தடுப்பூசியை வழங்க முன்வந்ததை அடுத்து நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டது.

இலங்கை அரசாங்கம் ஜெனீவாவையும் இந்தியாவையும் அமெரிக்காவின் நடவடிக்கைகளையும் கையாளும் அரசியலாக சீனாவை முன்னிறுத்திவருகின்ற போக்கு தொடர்ச்சியானதாக அமைந்து வருகிறது. அமெரிக்கா இலங்கை மீது எத்தகை பொறிமுறையைக் கொண்டிருப்பதென்பது கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக பெரும் அழுத்தம்' எதனையும் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா இல்லை என்பதுவும் இலங்கையுடன் இணைந்து பயணிக்க விரும்புவதையே அலைனாவின் அறிக்கை உணர்த்துகிறது. அதனைக் கடந்து ஜெனீவாவில் புதிய தீர்மானம் ஏதும் முன்வைக்கப்பட்டாலும் அதுவும் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு இசைவானதாகவே அமைய வாய்ப்புள்ளது. அதனை கோடிட்டுக் காட்டுவதாகவே அமெரிக்கத் தூதுவரது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அரசாங்கம் தனது தீர்மானத்திலும் முடிபுகளிலும் உறுதியாகக் காட்டிக் கொள்வது போல் தெரிந்தாலும் சிலவிடயங்களில் உலகத்தோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் காட்டுவது தற்போதைய சூழலை கடந்து செல்வதற்கான நகர்வாகவே தெரிகிறது.

எனவே இலங்கை உலக நாடுகளை மிக நுட்பமான கையாளுகைக்குள் கொண்டு செல்கிறது. எல்லாவற்றையும் எதிர் கொள்வதற்குரிய இராஜதந்திர உத்திகளை பிரயோகப்படுத்துகிறது. உள்நாட்டில் அனைத்தாண்மை செயல்பாடுகளை மேற்கொண்டு பயணிக்கும் இலங்கை அரசாங்கம் சாட்வதேச மட்டத்திலும் அதனை வெற்றிகரமானதாக மேற்கொள்ள முனைகிறது. இதற்கான நகர்வுகளை இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் சிந்தனை அமைப்புக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக பாத்பைண்டர் அமைப்பு அண்மையில் இலங்கை-அமெரிக்க உரையாடலை ஆரம்பித்துள்ளது. அதன் பிரதான உரையாடல் பங்கேற்பளராக றெபேட் ஓ. பிளேக் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்றுளட்ளார். இவ்வாறே ர~;சியாவையும் சீனாவையும் ஐரோப்பிய யூனியனையும் கையாளும் உத்தியுடன் அத்தகைய சிந்தனை அமைப்புகள் செயல்படுகின்றன.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE