Saturday 20th of April 2024 08:28:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவின் தடுப்பூசி  முகாமைத்துவ  செயற்பாடு சிறப்பானதென  பாராட்டு!

கனடாவின் தடுப்பூசி முகாமைத்துவ செயற்பாடு சிறப்பானதென பாராட்டு!


கனடாவில் கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி விநியோகத்தில் தாமதம் இருந்தபோதும் சா்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா தடுப்பூசி போடும் செயற்பாட்டில் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருவதாக பைசர் நிறுவனத்தின் கனடாவுக்கான தலைவர் கோல் பின்னோ தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் கனடா முழுவதும் 975,000 க்கும் மேற்பட்ட பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது நாட்டின் மக்கள்தொகையில் மூன்று சதவீதத்திற்கும் சற்றுக் குறைவானதாகும்.

பைசர் நிறுவனத்துடன், தடுப்பூசி ஒப்பந்தம் செய்துள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடா தடுப்பூசிகளைப் பெறுதல் மற்றும் அதனை வழங்குதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் நாங்கள் தடுப்பூசிகளை எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள 50 நாடுகளுக்கும் பகிரவேண்டிய கடமை உள்ளது.

கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தில் ஒரு மாதம் தாமதம் ஏற்பட்டாலும் இந்த வாரம் முதல் 400,000 க்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்க முடியும் என பைசர் நிறுவனத்தின் கனடாவுக்கான தலைவர் கோல் பின்னோ கூறினார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் அடுத்த மாத இறுதிக்குள் கனடாவுக்கு வழங்க வேண்டிய 40 இலட்சத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பைசர் நிறுவனத்தின் கனடாவுக்கான தலைவர் கூறினார்.

அத்துடன், செப்டம்பர் மாத இறுதிக்குள் உத்தரவாதமளித்தவாறு 40 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE