Thursday 25th of February 2021 07:31:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் தொற்று நோயாளர் தொகை மார்ச்,  ஏப்ரலில் மீண்டும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!

கனடாவில் தொற்று நோயாளர் தொகை மார்ச், ஏப்ரலில் மீண்டும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை!


கனடா முழுவதும் கொரோனா வைரஸ் புதிய பிறழ்வுகள் தொடர்ந்து பரவி வரும் நிலையில் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள பொது சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதாது என மத்திய அரசின் புதிய மாதிரிக் கணப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் புதிய மாதிரிக் கணிப்பீடு குறித்து விளக்கமளித்தனர்.

புதிய பிறழ்வு கொரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கலாம் என அவா்கள் தெரிவித்தனர். இதனைத் தடுக்க தற்போதுள்ளதை விட இறுக்கமாக கட்டுப்பாடுகள் தேவை எனவும் அவா்கள் வலியுறுத்தினர்.

கட்டுப்பாடுகளை இறுக்கமாகப் பேணாவிட்டால் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் காணப்பட்டதை விட மிக உயர்ந்த அளவில் தொற்று நோயின் தாக்கங்கள் அதிகரிக்கும். குறிப்பாக வசந்த காலத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகை 20,000 வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் மற்றும் துணை தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் ஹோவர்ட் என்ஜூ ஆகியோர் எச்சரித்தனர்.

தற்போது கனடா முழுவதும் சராசரி தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 2,900 என்ற அளவில் பதிவாகி வருகிறது.

தொற்று நோயாளர் தொகையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. இது ஆபத்தானது என தெரேசா டாம் தெரிவித்தார்.

இதேவேளை, பிரித்தானியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட பி 1.1.7, தென்னாப்பிரிக்காவில் முதலில் அடையாளம் காணப்பட்ட பி .1.351, மற்றும் பிரேசிலில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி 1 பிறழ்வு புதிய வைரஸ்கள் தற்போது தற்போது பரவி வருவதை அடிப்படையாகக் கொண்டு தொற்று நோய் குறித்த உத்தேச மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெப்ரவரி 18 -ஆம் திகதி நிலவரப்படி B.1.1.7 பிறழ்வு வைரஸ் தொற்றுக்குள்ளாக 664 பேர் கனடாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், B.1.351 பிறழ்வு தொற்று நோயாளிகள் 39 பேர் அடையளம் காணப்பட்டுள்ளனர். P.1 பிறழ்வுடள் தொடர்புடைய ஒரு தொற்று நோயாளி கண்டறியப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெப்ரவரி 28-ஆம் திகதி தொற்று நோயாளர் தொகை 878,850 வரை அதிகரிக்கும் என உத்தேச மாதிரிக் கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கனடாவில் மொத்த கொரோனா ரமரணங்கள் இந்த மாத இறுதிக்குள் 22,420 -ஆக உயரக்கூடும் எனவும் அதில் கூறிப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை புதிய மாதிரிக் கணிப்பீடு வெளியிடப்பட்டபோது நாடு முழுவதும் மொத்தம் 837,500 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகள் பதிவாகியிருந்தனர். அத்துடன், 21,500 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE