Wednesday 24th of April 2024 01:45:49 PM GMT

LANGUAGE - TAMIL
-
விபத்தை அடுத்து போயிங்-777 விமான சேவைகளை இடைநிறுத்தியது யுனைடெட் ஏர்லைன்ஸ்!

விபத்தை அடுத்து போயிங்-777 விமான சேவைகளை இடைநிறுத்தியது யுனைடெட் ஏர்லைன்ஸ்!


போயிங் 777 விமானத்தின் இயந்திரம் ஒன்று செயலிழந்து நேற்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து இந்த வகையான 24 விமானங்களின் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

231 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் அமெரிக்காவின் டென்வா் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹொனலுலுவிற்கு சென்று கொண்டிருந்த அமெரிக்காவின் யுனைட்டெட் ஏர் போயிங் 777-200 விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்தவாறு அவசரமாக நேற்று தரையிறங்கியது.

விமானம் புறப்பட்ட உடனேயே இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. கடுமையாகப் போராடிய விமானி டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறங்கியதாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் விமானம் அவசரமாகக் தரையிறங்கும்போது டென்வர் விமான நிலையம் அருகே உள்ள வீடொன்றின் மீது அதன் இறக்கை மோதியது. இதனால் வீட்டுக்கு சிறிய சேதம் ஏற்பட்டது. அத்துடன், விமானத்தின் சிறிய பாகங்கள் டென்வர் விமான நிலையத்தைச் சூழவுள்ள இடங்களில் வீழ்ந்து காணப்பட்டன.

இந்தச் சம்பவத்தை அடுத்து விபத்துக்குள்ளான பிராட் & விட்னி 4000 (Pratt & Whitney 4000 engine) ரக இயந்திங்கள் பொருத்தப்பட்ட போயிங் -700 விமானங்கள் தனது வான் பரப்பில் பறப்பதை தவிர்க்குமாறு ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது. ஜப்பானின் இந்த முடிவை ஆதரிப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் போயிங் தெரிவித்துள்ளது. நேற்று தீப்பிடித்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பிராட் & விட்னி 4000 ரக இயந்திங்கள் பொருத்தப்பட்ட 69 போயிங் 777 விமானங்கள் தற்போது உலகளவில் சேவையில் உள்ளதாகவும் போயிங் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை விமானங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து அவற்றை மேம்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் போயிங் குறிப்பிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE