Thursday 28th of March 2024 06:03:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
அணுசக்தி மைய கண்காணிப்பு  கமரா பதிவுகளை  ஐ.நா. பார்வையாளர்களுக்கு அளிக்க ஈரான் திடீர் மறுப்பு!

அணுசக்தி மைய கண்காணிப்பு கமரா பதிவுகளை ஐ.நா. பார்வையாளர்களுக்கு அளிக்க ஈரான் திடீர் மறுப்பு!


முன்னா் ஒப்புக் கொண்டவாறு ஐ.நா. சா்வதேச பாா்வையாளா்களிடம் தங்களது அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கமரா பதிவுகளை அளிக்கப்போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவா் ரஃபேல் குரேஸி நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் தலைநகா் தெஹ்ரான் விஜயம் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, சா்வதேச வங்கிப் பரிவா்த்தனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படாததால் நாடாளுமன்றத் தீா்மானத்தின்படி ஐ.நா. குழுவுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு பதிவுகளை அளிக்க முடியாது என தொலைக்காட்சியொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் முகமது ஜாவத் ஸரீஃப் தெரிவித்துள்ளர்.

ஈரானில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தை அரசு செயற்படுத்தியாக வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்ற தீா்மானத்தின் பிரகாரம் ஐ.நா. பாா்வையாளா்களுக்கு அணுசக்தி மையங்களின் கண்காணிப்பு கமரா பதிவுகளை அளிக்க முடியாது.

இது சட்டரீதியிலான முடிவே தவிர, அரசியல் முடிவு அல்ல என்றாா் ஜாவத் ஸரீஃப் தெரிவித்தார்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு பேரவை 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஈரான் உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ளப்படும் என இந்த ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டது.

எனினும், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து ஈரான் மீது விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் மீண்டும் அமுல்படுத்தினாா்.

இதன் பின்னர் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளிலிருந்து ஈரான் பின்வாங்கியது. அத்துடன், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புக்கு முன்னர் உறுதியளித்தவாறு கண்காணிப்பு கமரா பதிவுகளை வழங்கப்போவதில்லை எனவும் ஈரான் கூறியுள்ளது.

இவ்வாறான நிலையில் நேற்று ஈரானுக்கு விஜயம் செய்த சா்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவா் ரஃபேல் குரேஸி ஈரானில் அணுசக்தி திட்டங்களை தாங்கள் தொடா்ந்து பாா்வையிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

இதுதொடா்பாக தெஹ்ரானில் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து அவா் நேற்று பேச்சுவாா்த்தைகளை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE