Friday 26th of February 2021 06:10:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
640,000கோவிட்19 தடுப்பூசிகள் இவ்வாரம் கனடா வந்துசேரும்!

640,000கோவிட்19 தடுப்பூசிகள் இவ்வாரம் கனடா வந்துசேரும்!


கனடா இந்த வாரத்தில் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா நிறுவனங்களிடம் இருந்து 640,000-க்கு மேற்பட்ட கோவிட்19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.

ஒரே வாரத்தில் கனடாவுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளின் தொகை இதுவாகும்.

பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசி நிறுவனங்களில் மேம்படுத்தல் நடவடிக்கையால் தடுப்பூசிகளை ஒப்பந்தத்தன் பிரகாரம் கனடா பெற முடியாது சிக்கல்களை எதிர்நோக்கியது.

ஒரு மாத கால இடைவெளியைத் தொடர்ந்து 400,000 -க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டன.

ஒப்பந்தத்தின் பிரகாரம் மார்ச் மாத இறுதிக்குள் கனடாவுக்கு 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கில் பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தடுப்பூசிகளை கனடாவுக்கு தொடர்ந்து வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

அதிகளவு தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ள நிலையில் நோவா ஸ்கோடியா, ஒன்ராறியோ மற்றும் அல்பர்ட்டா மாகாணங்கள் முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

மேலதிக தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ள நிலையில் மாகாணங்கள் தடுப்பூசி போடும் செயற்பாடுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE