Friday 19th of April 2024 03:36:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
போயிங் விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறக்க தடை விதிப்பது குறித்து பரிசீலனை!

போயிங் விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறக்க தடை விதிப்பது குறித்து பரிசீலனை!


அமெரிக்காவில் இயந்திரம் செயலிழந்து நடுவானில் தீப்பற்றியதை ஒத்த போயிங் 777 ரக விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறப்பதற்கு தற்காலிகமாக தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக கனடா பயணிகள் விமான சேவை பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான இயந்திரம் நடுவானில் செயலிழந்து தீப்பற்றியமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விசாரணைகளின் முடிவைப் பொறுத்தே தடை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம். இது குறித்து அமெரிக்காவில் இடம்பெறும் விசாரணைகளையும் கவனித்து வருகிறோம். ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தேவைப்பட்டால் போயிங் 777 விமானங்கள் கனேடிய வான்வெளியில் பறப்பதை தடுக்கவும் தயங்கப்போவதில்லை என விமான சேவை பாதுகாப்பு வல்லுநர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளனர்.

இதேவேளை, கனடாவில் சேவையில் உள்ள எந்தவொரு போயிங் விமானங்களும் அமெரிக்காவில் செயலிழந்து தீப்பற்றிய பிராட் & விட்னி 4000 (Pratt & Whitney 4000 engine) ரக இயந்திரங்களைக் கொண்டிருக்கவில்லை என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

ஏர் கனடா 25 போயிங் 777 விமானங்களைக் கொண்டுள்ளது என்று அதன் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானங்கள் வேறு இயந்திரங்கள் பொருத்தப்பட்டவை என விமான ஏா் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, போயிங் 777 விமானத்தின் இயந்திரம் ஒன்று செயலிழந்து தீப்பிடித்ததைத் தொடர்ந்து இந்த வகையான 24 விமானங்களின் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், விபத்துக்குள்ளாக பிராட் & விட்னி 4000 (Pratt & Whitney 4000 engine) ரக இயந்திங்கள் பொருத்தப்பட்ட போயிங் -700 விமானங்கள் தனது வான் பரப்பில் பறப்பதை தவிர்க்குமாறு ஜப்பான் கேட்டுக்கொண்டுள்ளது. ஜப்பானின் இந்த முடிவை ஆதரிப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெற்று வருவதாகவும் போயிங் தெரிவித்துள்ளது.

தீப்பிடித்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த பிராட் & விட்னி 4000 ரக இயந்திங்கள் பொருத்தப்பட்ட 69 போயிங் 777 விமானங்கள் தற்போது உலகளவில் சேவையில் உள்ளதாக போயிங் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகை விமானங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து அவற்றை மேம்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் போயிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கனடா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE