Tuesday 23rd of April 2024 06:12:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட உதவி மையம் அமைப்பு: வடக்கு-கிழக்கிற்கு தொ.பே. இலக்கங்களும் அறிவிப்பு!

P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட உதவி மையம் அமைப்பு: வடக்கு-கிழக்கிற்கு தொ.பே. இலக்கங்களும் அறிவிப்பு!


'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை' மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சட்ட உதவியினை மேற்கொள்ளும் வகையில் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டு வடக்கு கிழக்கிற்கென தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

P2P பேரணி தொடர்பில் மட்டக்களப்பில் வைத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணை குறித்து கருத்துத் தெரிவித்த, வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களின் சம்மேளன இணைத்தலைவர்களில் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எத்தனை விசாரணைகள் நடைபெற்றாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடாத்தப்பட்ட மக்கள் பேரெழுச்சி இயக்கமானது தொடர்ச்சியாக எமது மக்களுக்கான நீதியினைக் கோரும் முகமாக பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்ய இருக்கின்றோம்.

அத்துடன் இவ்வாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது பல விசாரணைகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாங்கள் சட்ட வல்லுனர்களுடன் தொடர்பு கொண்டு பல ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றோம்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மற்றும் யாழ் மாவட்டங்களில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்கத்தின் சட்ட ஆலோசனை மையத்திற்கான தற்காலிக காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிசன் தேவாலய வளாகத்திலும் (தொலைபேசி இலக்கம் 0779661797) யாழ்ப்பாணத்தில் நல்லூர் சிவகுரு ஆதீனத்திலும் (தொலைபேசி இலக்கம் 0778568417) அமைக்கப்பட்டுள்ளன.

எனவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் ஏதேனும் சட்ட நடவடிக்கைகள்இ வழக்குகள்இ பொலிஸ் அச்சுறுத்தல்கள்இ விசாரணைகள் இருப்பின் மேற்சொன்ன விலாசத்தில் அல்லது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நிவாரணமும் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE