Saturday 27th of February 2021 01:35:44 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கில் கொரோனா விசுவரூபம்: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்றுறுதி!

வடக்கில் கொரோனா விசுவரூபம்: ஒரே நாளில் 42 பேருக்கு தொற்றுறுதி!


வடக்கில் மீண்டும் கொரோனா விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வு கூடங்களில் இன்று 658 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்கும், யாழ் மாவட்டத்தில் 17 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நடன ஆசிரியையுடன் நேரடியாகத் தொடர்புட்ட 12 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார், பருத்தித்துறை, வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE