மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த குடும்பத்தார் மன்னார் ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் பூநகரி வலைப்பாட்டு கிராமத்தவர்களுடன் தொடர்பினைப் பேணியவர்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மன்னார்