Friday 29th of March 2024 02:54:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆயிரத்தை நெருங்கியது வடமாகாணத் தொற்று: 23 நாட்களில் 188 பேருக்கு தொற்றுறுதி!

ஆயிரத்தை நெருங்கியது வடமாகாணத் தொற்று: 23 நாட்களில் 188 பேருக்கு தொற்றுறுதி!


வடமாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நேற்றைய தினம் (பெப்-23) வடமாகாணத்தில் 42 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் வடமாகாணத்தில் 94 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னரான நேற்று வரையான 10 நாட்களில் மேலம் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பெப்ரவரி மாதத்தில் கடந்த 23 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 563 பேருக்கு வடமாகாணத்தில் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதன் மூலம் இதுவரை வடமாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 999 ஆக அதிகரித்து ஆயிரத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருதனார்மடம் கொத்தணி சுகாதாரப் பிரிவினரது முழுவீச்சான செயற்பாட்டின் மூலமாக கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் தற்போது கிளிநொச்சி, மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களில் புதிய உப கொத்தணிகள் தோற்றம் பெற்றுள்ளமை வடமாகாணத்தில் மீண்டும் கொரோனா பதற்றம் பீடிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, பருத்தித்துறை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE