பல்வேறு கோரிக்கையை முன்வைத்து நாடு பூராகவும் சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த சிகிச்சை போன்ற செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயம்.
நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நீண்ட தூரங்களிலிருந்து சிகிச்சைக்காக வந்து நீண்டநேரம் காத்திருப்பதையும் சிலர் சிகிச்சை பெறாது திரும்பி செல்கின்றார்கள்.
சுகாதார பணியாளர்களில் சிலர் சீருடை அணியாது மனிதாபிமானமுறையில் சேவையில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது .
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி