Wednesday 24th of April 2024 07:08:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஈழத்தமிழருக்காய் ஒலித்த குரல் மௌனித்துது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஈழத்தமிழருக்காய் ஒலித்த குரல் மௌனித்துது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது!


ஈழத்தமிழருக்காய் ஒலித்த பாண்டியனின் குரல் மௌனித்துது ஈழ்த்தமிழருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கவலை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் தனது 88வது வயதில் சகயீனம் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்டவர் தா.பாண்டியன்.

அவரது மறைவு அரசியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதுடன் ஈழத்தமிழருக்காய் ஒலித்த பாண்டியனின் குரல் மௌனித்துது ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கவலை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

ஈழத்தமிழர்களையும் ஈழ்த்தமிழரின் போராட்டத்தையும் நேசித்தவரும் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழர்களுக்கு தனித்தேசம் வேண்டும் ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீது சர்வதேசம் கவனத்தினை செலுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் ஈழத்தமிழருக்கு சுய ஆட்சியை கொடுக்காவிட்டாலும் மாநிலசுயாட்சியுடன் கூடிய அதிகார பகிர்வையாவது வழங்க வேண்டும் என அழுத்தத்தை கொடுத்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்கள்.

அத்துடன் இலங்கை தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் சேர்த்துப் பார்த்தால் 10கோடி எண்ணிக்கை தாண்டுகிறது. ஆனால் அந்த இனத்திற்கு என்று ஒரு தனி நாடு இல்லை. பத்துக்ககோடி சனத்தொகையைக் கொண்ட ஜேர்மன் நாடு வல்லரசாக இருக்கையில் இத்தனை கோடிகணக்கில் சன்த்தொகையை கொண்ட தமிழினத்திற்கு மாநிலம் தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் என்ற வினாக்களை எழுப்பிய தா.பாண்டியன் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர்.

இவ்வாறான ஈழப்பற்றாளரின் இழப்பு எமக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கவலை தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE