Friday 23rd of April 2021 01:53:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதிப்பு!

தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதிப்பு!


ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதித்துள்ளது.

ஈழத்தில் இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்டுள்ள தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஈழத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், நடப்பு ஐநா மனித உரிமைகள் பேரவை தொடரில் இனப்படுகொலை அரசுக்கு எதிரான தீர்மானங்களை வலுப்படுத்தி நீதியின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இக்கவனயீர்பபு போராட்டம் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியுள்ளது.

தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதி தேரடித் தெருவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணம் காட்டி காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு முன்கூட்டியே சனநாயக முறைப்படி மதுராந்தகம் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கவனயீர்ப்பு பேரணிகான பரப்புரை விளம்பரங்கள், சுவரொட்டிகள் அனைத்து பகுதியிலும் ஒட்டப்பட்டு 90 % சதவிதம் வேலைகள் நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சட்டமன்றதேர்தலை காரணம் காட்டி எவ்வித பேரணியும், ஆர்ப்பாட்டமும், நடத்துவதற்கு அனுமதிகிடையாது என்று தேர்தல் ஆணையத்தின் நடைமுறையை காரணம் காட்டி தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்க்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு காவல்துறையினர் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளயர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE