Wednesday 21st of April 2021 05:12:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்திய விமானப்படைத் தளபதி உறுதி!

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்திய விமானப்படைத் தளபதி உறுதி!


இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா அலரி மாளிகையில் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

இலங்கை விமானப்படையின் 70-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள இலங்கைக்கு வந்துள்ள ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா பிரதமரை சந்தித்து, பாதுகாப்பு துறை சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா நீண்டகாலமாக பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைளில் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

இந்தியாவின் விமானப்படை இலங்கைக்கு பயிற்சிகளை வழங்குவது உள்ளிட்ட பல வழிகளில் ஒத்துழைத்து வருகிறது.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளதாக பிரதமருடனான சந்திப்பின்போது இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா உறுதியளித்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE