Thursday 25th of April 2024 12:33:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாகதம்பிரான் பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்!

நாகதம்பிரான் பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள்!


சுகாதாரத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் உற்சவத்தினை மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தி முடிப்பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று(04-03-2021) புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பூசை வழிபாடு டன் பகல் 11 மணிக்கு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக புதிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகின்ற பக்தர்களுக்கு அல்லது மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பொங்கல் உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து குறித்த ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் மாத்திரமே இந்த பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்களை அனுமதிப்பது ஆலயத்தின் சுகாதார நடை முறைகளைப் பின்பற்றுதல் என்பவற்றை போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆலய நிர்வாகம் சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் திரு த. பிருந்தாகரன் திணைக்களத் தலைவர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE