Thursday 28th of March 2024 04:36:26 PM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியாவின் 500,000 கோவிட் தடுப்பூசிகள் கனடா  வந்தன!

இந்தியாவின் 500,000 கோவிட் தடுப்பூசிகள் கனடா வந்தன!


இந்தியாவின் சீரம் நிறுவத்தின் தயாரிப்பான 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா - கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கனடா வந்து சோ்ந்தன.

கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனெகா - கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கனடாவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு உடன்பட்ட இந்தியப் பிரதமர் கனடாவுக்கு முதல் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க ஒப்புக்கொண்டார்.

இதன்படி இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா -கோவிஷீல்ட் 5 இலட்சம் கோவிட்19 தடுப்பூசிகள் கனடாவிற்கு வந்து சேர்ந்தன.

இந்நிலையில் இந்தியாவின் இந்த ஒத்துழைப்புக்கு கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், மேலும் 15 இலட்சம் கோவிஷீல்ட் விரைவில் கனடாவுக்கு வரும் எனவும் அவா் தெரிவித்தார்.

இதேவேளை, கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் இந்தியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து மீளும் நிலை வந்தால் அவற்றில் நிச்சயம் இந்தியாவின் பங்கு இருக்கும். கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் மோடிக்கு எங்களது நன்றி எனவும் ட்ரூடோ கூறியுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE