Friday 29th of March 2024 03:57:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
முஸ்லீம் மக்கள் ஜனசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்; மாவை!

முஸ்லீம் மக்கள் ஜனசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்; மாவை!


இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்த முஸ்லீம் மக்களின் ஜனசாக்களை எங்கே அடக்கம் செய்வதென்பதில் மேலும் குழப்பமான இன மத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதைக் கண்டிக்க வேண்டும்.

அரசு ஐ.நாவில் கூட முஸ்லீம்களின் ஜனசா அடக்கம் செய்யும் பிரச்சனை தீர்ந்து விட்டது. மனித உரிமைப் பேரவை அறிக்கையிலிருந்து இப்பிரச்சனையை நீக்கிவிடுமாறு கோருகின்றது. இக்கோரிக்கையானது மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட பிரேரனையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முஸ்லீம் நாடுகளைக் கவருவதற்காகவேயாகும். இம் முயற்சியானது முஸ்லீம் மக்களையும் நாடுகளையும் ஏமாற்றும் முயற்சியேயாகும்.

கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களை யாழ் மாவட்டம் கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்திலுள்ள இரணதீவில் அடக்கம் செய்வதற்கான அரசின் தீர்மானத்தை அங்குள்ள மக்களும் கிருத்துவ மதத் தலைவர்களும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கூட எதிர்த்துப் போராடுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ நிபுணர்குழுவுங் கூட இரணைதீவைக் குறித்துச் சொன்னதாக இல்லை. அக் குழுவின் சிபார்சுகளில் முஸ்லீம் மக்களின் இறப்பு கொரோனாவில் இடம்பெற்றால் ஜனசாக்களை அந்தந்த இடங்களில் அடக்கம் செய்யலாம் என்றே அறிவித்துள்ளது.

அவ்வாறிருக்க அரசு ஏன் இந்தத் தவறான முடிவை எடுத்தது. இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்வதற்கு யாரின் சிபார்சு பெறப்பட்டது?

எனவே அரசு இரணைதீவில் கொரோனா ஜனசாக்களை அடக்கம் செய்ய எடுத்த இத்தீர்மானத்தை உடன் திருப்பிப் பெறவேண்டும்.

பதிலாக அரசு இஸ்லாமிய மதத்தலைவர்களுடன் கலந்தாலோசித்துப் பொருத்தமான இடங்களில் கொரோனாவினால் மரணமடைந்த ஜனசாக்களை இஸ்லாமிய மத ஆராதனையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அறிவிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE