Thursday 28th of March 2024 08:23:31 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளி. மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்: சுமந்திரன்-டக்ளஸ் கருத்து மோதல்!

கிளி. மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்: சுமந்திரன்-டக்ளஸ் கருத்து மோதல்!


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையடுத்து சில நிமிடங்கள் சபை அமைதியாக காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பெருந்தெருக்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் இதன்போது பேசப்பட்டது, அதற்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கும் ஒரு வீதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டிருந்தார். நான் நாடாளுமன்ற உறுப்பினராக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன் ஆனால் நீண்ட காலமாக பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் குறிப்பிடுகையில்,

மாகாண சபையை தவிர மற்ற எல்லோருக்கு கிடைக்கின்றன என்ற விடையத்தை பகிர்ந்தபோது சபையில் இருந்தோர் நகைச்சுவையாக சிரித்தனர். ஆளுநர், மாகாண சபை தவிர்ந்து வேறு யார் கேட்டாலும் கிடைக்கினறன என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அபிவிருத்தி குழுவின் இணை தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆகிய இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என கூறி அமைச்சரை கிண்டல் செய்ய முற்பட்டபோதே கருத்து மோதல் ஆரம்பமாகியது.

பதிலுக்கு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, உங்களின் ஆட்சி காலத்தில் கம்பெரலிய என்ற திட்டத்தை நீங்கள்தான் செய்தீர்கள். அதன் மூலம் செய்த வேலைகளும் எமக்கு தெரியும் என பதிலுக்கு தெரிவித்தார். அதேபோன்றுதான் ஒவ்வாறு ஆட்சியாளர்களிற்கும் நிகழ்ச்சி நிரல் உள்ளது என்ற விடயத்தினையும் அவர் பதிவு செய்தார்.

இதன்போது கம்பெரலிய நிதியை நாம் கையாளவில்லை. திணைக்களங்கள் ஊடாகவே கையாளப்பட்டது என சிறிதரன் தெரிவித்தார்.

பதிலளித்த அமைச்சர், நீங்கள்தான் பட்டியலை கொடுக்கின்றீர்கள் என தெரிவித்தபோது, இப்போதும் நாங்கள்தான் பட்டியல் கொடுக்கின்றோம் என சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், இரு அரசாங்கங்களும் மோதிக்கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் மாகாணத்திற்கென்றேதேனும் வைத்துக்கொண்டு கொடுத்தால் நல்லது என தெரிவித்தார்.

வீதிகள் என்ன அடிப்படையில் கொடுக்கப்படுகின்றது என அமைச்சரிடம் சுமந்திரன் வினவினார். பதிலளித்த அமைச்ர்,

அரசாங்கம் கிடைக்கின்ற காசுகளை வேலை செய்வதற்காக ஒதுக்கி வீதி அபிவிரு்ததி அதிகார சபைக்கு கொடுத்திருக்கின்றது. வேலையை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கொடுக்கப்படுகின்றது என தெரிவித்தார். தொடர்ந்தும் சுமந்திரன் கேள்விகளை எழு்பியபோது இவ்வாறான விடயங்களை பாராளுமன்றத்தில் கதைப்போம், இந்த நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

கேள்வி கேட்டால் பதிலளிக்க வே்ணடும் என சுமந்திரன் தெரிவித்தபோது, பதிலளிக்கலாம் ஆனால் எதற்காக இங்கு கூடினோமோ அதை நிறைவேற்ற முடியாது போய்விடும் என்ற விடயத்தினை குறிப்பிட்ட போது, சுமந்திரன் தொடர்ந்தும் குறுக்கிட்டார்.

இந்த நிலயைில் இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதுடன், சில நிமிடங்கள் சபை அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Category: செய்திகள், புதிது
Tags: ம.ஆ.சுமந்திரன், இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE