Friday 19th of April 2024 11:37:10 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.கார்கிள்ஸ் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றவர்களுக்கான அறிவித்தல்!

யாழ்.கார்கிள்ஸ் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றவர்களுக்கான அறிவித்தல்!


யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள கார்கிள்ஸ் திரையரங்கிற்கு கடந்த இரண்டு வாரங்களுக்குள் படம் பார்க்கச் சென்றவர்களுக்கு,

உங்களுக்கு காய்ச்சல், தடிமன், தொண்டை நோ உட்பட்ட கொரோனாத் தொற்று அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள சுகாதாரத் திணைக்களப் பணிமனையினரை நாடுங்கள்,

இல்லையேல் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தொலைபேசி இலக்கமாகிய 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்திலோ தொடர்புகொண்டு உங்கள் பற்றிய விபரங்களை அறியத்தாருங்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் உங்களையும் எங்கள் சமூகத்தையும் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு இலகுவாக இருக்கும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE