Tuesday 23rd of April 2024 11:15:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
2019ம் ஆண்டுக்கான கிளிநொச்சி பிரிமியர் லீக் கிண்ணம் யுனிற்றட் அணி வசமானது!

2019ம் ஆண்டுக்கான கிளிநொச்சி பிரிமியர் லீக் கிண்ணம் யுனிற்றட் அணி வசமானது!


2019ம் ஆண்டுக்கான கிளிநொச்சி பிரிமியர் லீக் கிண்ணம் யுனிற்றட் அணி வசமானது. குறித்த போட்டியின் இறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

2019ம் ஆண்டு நடைபெறவேண்டிய குறித்த போட்டியின் இறுதி போட்டி நிகழ்வுகள் கொவிட் 19 தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இறுதி போட்டி நாளான இன்று யுனிறட் அணியு்ம, இளந்தாரகை அணியும் மோதின. இப்போட்டியில் யுனிற்றட் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்றிசில் வெற்றிபெற்ற இளந்தாரகை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய யுனிற்றட் அணி 20 பந்துபரிமாற்றத்தின் நிறைவில் 136 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பெடுத்தாடிய யுனிற்றட் அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய எஸ் ருசாந்தன் ஆட்டமிளக்காது 37 ஓட்டங்களையும், வி.பிரியன் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இளந்தாரகை சார்பில் பந்துவீசிய பி.துஸ்யந்தன் நான் ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களை கொடுத்த 03 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

137 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்த அணி 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இளந்தாரகை அணி சார்ப்பில் என்.ஜதுசன் 27 ஓட்டங்களையும், ஆர்.விக்சன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் யுனிற்றட் அணி சார்பில் ஆர்.பிரதீபன் 04 ஓவர் பந்து வீசி 26 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கட்டுகளையும், வி.பிரியன் 03 ஓவர் பந்து வீசி 29 ஓட்டங்களை கொடுத்து 02 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் 2019ம் ஆ்ணடு கிளிநொச்சசி பிரிமியர் லீக் கிண்ணத்தை யுனிற்றட் அணி தன்வசமாக்கியது.

போட்டியின் ஆட்டநாயகனாக எஸ்.புசாந்தன் தெரிவானார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE