உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
23 மாநகர சபைகள் உட்பட 335 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்றது.
குறித்த சபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியில் முடிவுக்கு வருகின்றது. இந்தநிலையிலேயே தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் அதாவது மார்ச் மாதமளவில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு கலப்பு முறைமையிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதுடன், பெண் பிரதிநிதித்துவமும் கட்டாயமாக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைமையில் சில குளறுபடிகள் உள்ளன. இதனால் ஸ்திரமற்ற ஆட்சியும் அமைகின்றது. எனவே, சில திருத்தங்களுக்கு மத்தியிலேயே தேர்தல் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.