Wednesday 21st of April 2021 04:50:09 AM GMT

LANGUAGE - TAMIL
-
தென்னிந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!


இந்திய தேசிய விருதுபெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் சற்று முன்னர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு, ஈ போன்ற படங்களை அவர் இயக்கி புகழ்பெற்றிருந்தார்.

இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீர் உடல் நிலைப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை திரைத்துறையில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE