Wednesday 21st of April 2021 04:14:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படமாக அசுரன், நடிகராக தனுஷ் தேர்வு!

67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படமாக அசுரன், நடிகராக தனுஷ் தேர்வு!


இந்தியளவில் வழங்கப்படும் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக அசுரன் திரைப்படம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் சிறந்த நடிகராக தனுசும் தெரிவு செய்யப்பட்டுளார்.

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - இந்தி)

சிறந்த படம் - மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி

சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த அறிமுக இயக்குனர் - மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர் - பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகி - சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்)


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE