இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என சச்சின் டெண்டுல்கர் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய ஜாம்பவான் அணிகள் மோதின. இதில் இந்திய ஜாம்பவான் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமை வகித்தார்.
இதனிடையே இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா