Wednesday 21st of April 2021 04:57:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவலரணில் பொலிஸ் உத்தியோகத்தர் காரால் மோதி கொலை!

அமெரிக்க நாடாளுமன்ற வளாக காவலரணில் பொலிஸ் உத்தியோகத்தர் காரால் மோதி கொலை!


வொஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற வளாக பாதுகாப்பு காவலரண் மீது காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்தார்.

நாடாளுமன்ற பாதுகாப்பு காவலரண் மீது காரால் மோதித் தாக்குதல் நடத்திய நபர் பின்னர் காரில் இருந்து குதித்து பொலிஸாரை கத்தியாலும் குத்தியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தத் தாக்தலையடுத்து தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என வொஷிங்டன் டி.சி.யின் பெருநகர பொலிஸ் துறை தலைவர் போபேர்ட் கான்டி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் வில்லியம் பில்லி எவன்ஸ் என்ற 18 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே கொல்லப்பட்டவராவார்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபர் இந்தியானாவைச் சேர்ந்த 25 வயது நோவா கிரீன் என்ற 25 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியில் கொலையை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE