Wednesday 24th of April 2024 04:35:50 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாவீரன் பிள்ளை திரைப்படத்தில் வீரப்பனின் மகள் கதாநாயகியாக அறிமுகம்!

மாவீரன் பிள்ளை திரைப்படத்தில் வீரப்பனின் மகள் கதாநாயகியாக அறிமுகம்!


வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி 'மாவீரன் பிள்ளை' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கே.என்.ஆர். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரத்தை படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரத்தில் கையில் துப்பாக்கியுடன் புரட்சிப் பெண்ணாக காட்சி தருகிறார் விஜயலட்சுமி.

இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

மது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இருக்கிறார்.

வீரப்பனின் மகள் நடிப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE