Tuesday 16th of April 2024 02:04:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தில் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் இரத்தம் உறைந்து பலியானதாக அறிவிப்பு!

இங்கிலாந்தில் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேர் இரத்தம் உறைந்து பலியானதாக அறிவிப்பு!


இங்கிலாந்தில் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர் இரத்தம் உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து மருத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தியோகபூா்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் - அஸ்ட்ரஜெனகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரத்தல் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக கடந்த இரண்டு மாதங்களாக கவலைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனையடுத்து இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு மற்றும் சில நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அஸ்ட்ரஜெனகா தடுப்பூசிக்கும் இரத்தம் உறைவுச் சிக்கலுக்கும் தொடர்பில்லை என உலக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்ட 7 பேர் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து மருத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தியோகபூா்வமாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த 24-ஆம் திகதி வரையான கணக்கெடுப்பில் 1 கோடியே 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவா்களில் 30 பேருக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும் இங்கிலாந்து அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனாலும், அவர்கள் மரணத்திற்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுதான் காரணமாக என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இதேவேளை, இந்தியாவில் நேற்றுமுன்தினம் வரை 7 கோடியே 90 லட்சம் பேர் அஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போடப்பட்டுள்ளபோதும் அவர்களில் யாருக்கும் இரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE