Saturday 20th of April 2024 04:56:08 AM GMT

LANGUAGE - TAMIL
-
533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்!

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்!


உலகம் முழுவதும் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் கணக்கு விவரங்கள் இணையத்தில் கசிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது.

இஸ்ரேலின் இணைய வழிக் குற்றங்கள் தொடர்பான உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் என்பவர் பேஸ்புக் பயனாளர்கள் 50 கோடி பேரின் தகவல்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல்களை கடந்த ஜனவரி மாதம் முதல் இணையத் தளங்களில் பெறக்கூடியதாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக் பயனாளர்களின் முழுப் பெயர், அவர்களின் கைத்தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரி, திருமணம் ஆனவரா? இல்லையா? என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களும் இவற்றில் இடம் பெற்றுள்ளன.

இந்த தகவல்களை ஆலனுடன் இணைந்து பிசினஸ் இன்சைடர் நிறுவனம் பரிசோதித்ததில் அவை உண்மையான தகவல் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் வழக்கம் போல் மறுத்துள்ளது. ‘தற்போது வெளியாயிருக்கும் தகவல்கள் பழையவை. இவை, 2019-ஆம் ஆண்டிலேயே கசிந்ததாக கூறப்பட்டு, அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது,’ என பேஸ்புக் கூறியுள்ளது.

50 கோடிக்கு மேற்பட்டோரிக் தகவல்கள் இணையத்தில் உலாவுவது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், தனிநபர் தகவலுக்கு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE