Saturday 20th of April 2024 04:06:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021: 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021: 3 மணி நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பதிவு!


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 இற்கான வாக்குப்பதிவு காலை முதல் உற்சாகமாக இடம்பெற்று வருகையில் பி.பகல் 3.00 மணி வரையான நிலவரப்படி 53.35 சதவீத வாக்குகள் பாதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

234 சட்டமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணி முதல் உற்சாகமான வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்டசத்திரங்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் காலை முதல் உற்றசாகமாக வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு மிதிவண்டியில் சென்று வாக்களித்து திரும்பியுள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகர் விஜய் மிதிவண்டியில் சென்று வாக்களித்தமை குறித்து பலரும் பலவிதமான அரசியல் காரணங்களை கூறிவரும் நிலையில் விஜய் தரப்பில், அவற்றை முற்றாக நிராகரித்துள்ளதுடன், வீட்டிற்கு அருகாமையில் வாக்குச்சாவடி இருந்த காரணத்தால் அவ்வாறு சென்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெரியளவிலான வன்முறை சம்பவங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது.

11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது.

மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது.

மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்துள்ளது.

பி.பகல் 7.00 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE