Friday 19th of April 2024 02:27:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் ; வி மணிவண்ணன்!

யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் ; வி மணிவண்ணன்!


யாழ் மாநகர காவலர்கள் நாளையிலிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன்தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையான நகரமான பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமை புரிவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவித்தார் .

யாழ் மாநகர சபையில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை துப்புவோர், வாகனங்களை பொதுவிடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு யாழ்ப்பாண மாநகர ஊழியர்கள் ஐவர் தனியான சீருடை அணிந்து நாளையிலிருந்து கடமையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணமும் வெற்றிலை துப்புவோருக்கு 2 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிட படவுள்ளதோடு குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் என தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE