Monday 19th of April 2021 10:11:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
சாணக்கியனை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரியுங்கள் - சபையில் இராஜாங்க அமைச்சர்!

சாணக்கியனை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரியுங்கள் - சபையில் இராஜாங்க அமைச்சர்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை உடனடியாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் வலியுறுத்தினார்.

2021ஆம் ஆண்டில் அரச தரப்பினர் மீண்டுமொரு தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று சாணக்கியன் எம்.பி. சபையில் கூறிய கருத்து தொடர்பிலேயே அவர் இந்த விசாரணையை கோரியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் கருத்தியலை ஆதரிப்பவர்களும் இன்று எமது அரசு மீண்டுமொரு தாக்குதலை நடத்தத் திட்டமிடுகின்றது எனக் கூறுகின்றனர்.

வேண்டுமென்றே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்காதிருந்த எதிர்க்கட்சியினர் மீண்டுமொரு காட்டிக்கொடுப்புக்குத் தயாராகின்றனரா?

சாணக்கியனின் கருத்து தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, உடனடியாக அவரிடம் விசாரணைகளை நடத்தி அவரது கூற்று தொடர்பான உண்மை நிலையை அறிந்து நாடாளுமன்றத்துக்கும் நாட்டுக்கும் வெளிப்படுத்துவது அத்தியாவசியமாகும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE